தர்மபுரி மாவட்டம் ராமியனஅள்ளி மின்வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 10,000 மதிப்புள்ள உயர் மின்னழுத்த அலுமினிய கம்பிகள் திருட்டு போனது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், சபரி, லோகேஷ் குமார் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 3 பேரையும் கோபிநாதம்பட்டி காவலர்கள் இன்று (நவம்பர் 8) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.