இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், இருமத்தூர் அடுத்த கொன்றம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது 2-வது மகன் நாகேந்திரன் பென்னாகரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 30) மாலை கொன்றம்பட்டி- இருமத்தூர் சாலையில் நாகேந்திரன் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது ஏற்கனவே நாகேந்திரன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கம்பைநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி