அரூர்: ஊருக்குள் உலா வரும் காட்டுப்பன்றிகள் பொதுமக்கள் அச்சம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி பெரும்பான்மையான வனத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளாகவும் மலைப்பகுதிகளாகவும் அமைந்துள்ளது. 

இந்த நிலையில் அவ்வப்போது வனவிலங்குகள் கிராமங்களுக்குள்ளும் நகரப் பகுதிக்குள்ளும் வந்து செல்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கும் நிலையில், இன்று பிப்ரவரி 24 விடியற்காலை 4 மணி அளவில் கோவிந்தசாமி நகர், திருவிக நகர், நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் காட்டுப் பன்றிகள் தனது குட்டிகளுடன் உலாவந்தது. 

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனத்தை இயக்கிச் சென்றனர். எனவே ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி