அரூர்: முதியவரை தாக்கி நகை பறிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒடசல்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் இவர் தனது மகளின் தோட்டத்தில் புதிதாக கட்டப்படும் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று (அக்.,8) காலை அந்த பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சுந்தரத்தை தாக்கினார்.

பின்னர், அவருடைய கழுத்தில் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த சுந்தரத்தை உறவினர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்த னர். இதுதொடர்பான புகாரின் பேரில் அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்.? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி