அரூர்: பேருந்து-லாரி மோதல்; 4 குழந்தைகள் காயம்

அரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு நேற்று (அக்டோபர் 07) மாலை பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்த போது, மறுக்காலம்பட்டி பகுதியில் திரும்பிய போது அந்த வழியாக வந்த மணல் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டன.

இதில் பேருந்தில் இருந்த 4 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், அரூர் காவல் ஆய்வாளர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி