அரூர்: திமுக-பாஜக நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (பிப்ரவரி 24) வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதனை அடுத்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஒருவருக்கு நான்கு லட்சம் என இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். 

இதனை அடுத்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து வரும் சூழலில், சம்பவ இடத்திற்கு இன்று நேரில் தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பார்வையிட்டனர். அப்போது, அங்கு இருந்த திமுகவினருக்கும், பாஜகவிற்கும் வாக்குவாதம் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்புடைய செய்தி