அரூர்: கல்லூரி மாணவி மாயம்; காவலர்கள் விசாரணை

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமநாதம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் ஸ்ரீநிதி (23). இவர் தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டு விட்டு, தூங்கச் சென்றார். 

மறுநாள் காலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, ஸ்ரீநிதியை காணவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் பெற்றோர் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி