இதையடுத்து, இருவரும் கடந்த ஜனவரி 31ம் தேதி, தள்ளப்பாடியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், திருநாவுக்கரசு தனது நண்பர் வீட்டில் சிறுமியுடன் தங்கிருந்தார். இந்நிலையில், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் விசாரித்த போது, சிறுமிக்கு 16 வயது என்பது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் அளித்த தகவலின் பேரில், தர்மபுரி குழந்தைகள் நல காப்பகத்தினர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், இதுபற்றி கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவலர்கள் திருநாவுக்கரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.