அரூர்: புதிய மின் நிலையம் அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இன்று மார்ச் 21, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் கேள்வி நேரத்தில் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிப்பட்டி பேரூராட்சியில் 220 கே.வி. துணை மின் நிலையம் அமைத்தால் அரூர் சுற்றியுள்ள மாம்பட்டி, அரூர், மொரப்பூர், இராமியம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஐந்து 110 கே.வி. துணை மின் நிலையங்களில் உள்ள சீரான மின்சாரம் வழங்க முடியும் என்பதால் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செட்டிப்பட்டி பகுதியில் புதியதாக 220 கே.வி. துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்புடைய செய்தி