மேலும் மக்கள் தங்களின் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரூர் எம்எல்ஏ சம்பத்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று அக்டோபர் 05 மாலை இக்கிராமத்திற்கு புதிய பேருந்து விடப்பட்டது. இதனை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் துவக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார் மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.