தர்மபுரி மாவட்டம் அரூர் கொங்கு மண்டபத்தில் அரூர் ரோட்டரி கிளப் மற்றும் விஜய் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று(மார்ச் 16) காலை 10 மணிக்கு துவங்கியது. இந்த மருத்துவ முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த தட்டுப் பிரிவுகள் எண்ணிக்கை, ரத்தத்தின் வகைப்பாடுகள் மற்றும் சிறுநீரக பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள், மேலும் நோய்களுக்கான அறுவை சிகிச்சை குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.