அரூர் வட்டத்துக்குட்பட்ட கலசப்பாடி ஆற்றில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, இன்று (அக்டோபர் 08) காலை காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கலசப்பாடி ஆற்றை கடந்து செல்லும் மலைக் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
ஆற்றைக் கடக்க பாலம் வேண்டி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை அளித்தும், இதுவரை பாலம் கட்டி தராததை அடுத்து பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.