தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகாமையில் அமைந்துள்ள புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுகிறது. நேற்று நடந்த சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் நேற்றைய சந்தையில் மாடுகள் 5, 0005,000 முதல் 46, 50046,500 வரையும், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் 5, 7005,700 முதல் 11, 00011,000 வரையும், நாட்டுக்கோழி, சேவல் ஆகியவை 300 முதல் 1, 2001,200 வரையிலும் விற்பனையானது. நேற்றைய சந்தையில் 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.