தர்மபுரி: பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி கம்பைநல்லூர் அருகே அமைந்துள்ள அரியகுளம் பகுதியில் நேற்று மாலை தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீது திருப்பத்தூர் சாலையில் இருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து காட்சிகள் பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி தற்போது தர்மபுரி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி