கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

மொரப்பூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது எம். வேட்ரபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா (வயது 24) அப்பியம்பட்டி தீபக் (23), மோட்டூர் மூவேந்தன் (25) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அரூரில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் அரூரை சேர்ந்த சாதிக் (வயது 26) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைகைது செய்தனர். இதேபோல் லாட்டரி சீட்டு விற்றதாக வேட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி