குடும்ப தகராறில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை.

தருமபுரி அருகேயுள்ள குப்பா கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் குடும்ப பொறுப்பை கார்த்திக் பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் குடிப்பழக்கத்தால் வீட்டிற்கு பணம் தராமல் கார்த்திக் செலவு செய்து வந்துள்ளார். நேற்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கார்த்திக்கின் தாய் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் பணத்தை கொடுத்து தனது தாயை கோவிலுக்கு பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வந்த கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி