தர்மபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி நகர காங்கிரஸ் மு. தலைவர் செந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் குமரவேல் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.