தர்மபுரி: தர்மபுரியில் பாமக பொதுக்கூட்டம்

தர்மபுரி வள்ளலார் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜாதி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் தான் மேற்கொண்ட பயணத்தின் போது இது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருப்பதாகவும், இன்னும் ஆறு மாத காலத்தில் திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி