தின்னஅள்ளி கிராமத்தில் உள்ள பழையூர் மகாசக்தி மாரியம்மன், பூலா மாரியம்மன் கோயில். இக்கோயில் திருவிழா 3 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி விழா கொடியேற்றி பழையூர் மாரியம்மனுக்கு பாலபிஷேகத்துடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று மாலை பழையூர் மகாசக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி, பக்தர்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து சென்று அம்மனுக்கு படைத்தல் நிகழ்ச்சி, பம்ப வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது.