தர்மபுரி நகராட்சி சந்தைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாரச் சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து, 4,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.