தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடந்த வெள்ளி விழா கொண்டாடத்தின் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர், திருவள்ளுவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து திருக்குறளும் அதற்கான விளக்கப்பட ஓவியங்களையும், திருக்குறள் சார்ந்த புத்தக கண்காட்சியையும் பார்வையிட்டார்.
விழாவில் அனைவரும் திருக்குறளை அதன் பொருளறிந்து வாசித்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே திருக்குறளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என பேரூரையாற்றினார்.