தருமபுரி நகரின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, நகரின் வளர்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு தனியார் பங்களிப்புடன் ஏ. ரெட்டிஅள்ளி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை இன்று வியாழக்கிழமை முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி எம். பி மணி, மாவட்ட ஆட்சியர் சதிஷ், பென்னாகரம் எம். எல். ஏ ஜி. கே. மணி, தர்மபுரி எம். எல். எஸ். பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பேருந்து நிலையத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.