தர்மபுரி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை, நகர பேருந்து எண் 22, பெண்கள் சொல்லியும் நிறுத்தாமல் வேகமாக சென்றதால் சில பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் இலவச பயணத்தை மேற்கொள்வதால் தங்களை இழிவாக பார்ப்பதாகவும், தேவைப்பட்டால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.