தர்மபுரி: கடைவீதியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

தர்மபுரியில் அதிமுக நகர கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் தலைமையில் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி முன்னிலையில் 18, 19 & 20 வார்டுகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

பூத் கமிட்டி நிர்வாகிகள் அம்மா வடிவேல், பலராமன், சக்திவேல், காந்திநகர் மாதேஷ் வரவேற்றனர். மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் இஸ்மாயில் கார்த்திக், கற்பகம் சரிதா, மாணவரணி செந்தில் கலந்து கொண்டனர். இதில் தர்மபுரி 33 வார்டுகளில் பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக அமோகமாக வெற்றி பெற பாடுபட வேண்டும். அது குறித்து அந்தந்த பகுதிகளில் பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் பேசினார்.

தொடர்புடைய செய்தி