தருமபுரி மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று (நவம்பர்-20) வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் தர்மபுரி எம்பி. மணி கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.