பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம் நவம்பர் 28-ஆம் தேதி வெளியாகிறது. கிரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், புரோமோஷன் விழாவில் காதல் தோல்வி கதாபாத்திரங்களுக்குத் தன்னை அழைப்பது ஏன்? என தனுஷ் கேட்டதற்கு, "தனுஷின் முகம் நன்றாக ஒத்துவருகிறது" என ஆனந்த் எல். ராய் பதிலளித்துள்ளார்.