'குபேரா' திரை படத்திற்காக தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என அப்படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த குபேரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், குபேரா பான் இந்தியா அளவில் எடுக்கப்பட்ட முதல் சமூக அரசியல் த்ரில்லர் ஆகும். தனுஷ் நடித்த தேவா கேரக்டரில் வேறு யாராலும் நடிக்க முடியாது என கூறியுள்ளார். ஆடுகளம், அசுரன் படங்களுக்கு தனுஷ் ஏற்கனவே இரண்டு முறை தேசிய விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.