தனுஷ் பட பூஜையின் கேமராவால் வந்த சிக்கல்.. படக்குழு வாக்குவாதம்

சிவகங்கை மாரநாட்டில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடிகர் தனுஷின் 56வது படத்துக்கான பூஜை செப்., 25 அன்று நடைபெற்றது. படக்குழுவினர் உரிய அனுமதி பெறாமல் கேமராவை கோயிலுக்குள் கொண்டு வந்ததால், அறநிலையத்துறை ஊழியர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் படக்குழுவினருக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு படக்குழுவினரை வெளியேற்றினர். பின்னர் தனுஷ் 18 அடி நீள அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தினார். தொடர்ந்து 20 கிடாய்கள் வெட்டி ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி

✕
✕