சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தினரின் மகளிரணி நிர்வாகிகளை இன்று (அக்.25) சந்திக்கிறார். இதற்காகக் கொட்டும் மழையிலும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் காலை முதலே அந்தத் தனியார் கல்லூரியில் கூடி வருகின்றனர். காலை 11 மணியளவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி மதியம் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடிகர் தனுஷ் வருகை தந்துள்ளார். தொடர்ந்து, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நன்றி: Newstamil24x7