மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற மத வழிபாட்டின்போது, பக்தர்கள் சுமார் 11,000 லிட்டர் பாலை நர்மதா நதியில் ஊற்றி வினோத செயலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.7,70,000 மதிப்புள்ள இந்த பால் நதியில் கலந்ததால், நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்து, மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மத நம்பிக்கைகள் பெயரில் இத்தகைய செயல்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.