கொச்சியில் உள்ள ஒரு கோயிலில் திருவிழாவின் போது, சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறியது. இதனால் அதன் பாகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக்ரோஷமடைந்த யானை கோயில் அலுவலகத்தை நோக்கிச் சென்று அங்கேயே நின்றது. இந்தச் சம்பவத்தால் பக்தர்கள் பீதியடைந்தனர். கோயில் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தி பக்தர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். திருவிழாக்களின் போது யானைகள் மதம் பிடித்து அட்டகாசம் செய்வது கொச்சியில் பதிவாகி வரும் சம்பவமாகும்.