திருச்செந்தூரில் 50 ஜோடிகளுக்கு திருமணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்தம் காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று (பிப்., 22) அதிகாலை நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமானோர் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சுமார் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் வருகையால் கோயில் களைகட்டியது.

தொடர்புடைய செய்தி