விநாயகருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ லட்டுவை ரூ.39 லட்சத்திற்கு வாங்கிய பக்தர்

ஹைதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சிலை கரைப்பின் இறுதி நாளில் வழக்கமாக நடைபெறும் பிரசாத லட்டு ஏலத்தில், 21 கிலோ எடை கொண்ட லட்டு சாதனை அளவாக ரூ.39 லட்சத்திற்கு ஏலம் போனது. அர்பன் ரியாலிட்டி குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சமா பிரணீத் என்பவர் இந்த லட்டை ஏலம் எடுத்தார். இந்த ஏலம் மூலம் திரட்டப்படும் நிதி முழுமையாக பாலாப்பூரின் உள்ளூர் வளர்ச்சி மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி

✕
✕