தேவர் சமுதாய அரசாணை.. தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. ஆனால் இது தற்போது வரை நடைமுறை படுத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இதனை நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரிய மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. மனு மீது பதிலளிக்க கூடுதலாக 4 வாரம் அவகாசம் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி