புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசில் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் ரங்கசாமி வசம் வருவாய், கூட்டுறவு, பொது நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நமச்சிவாயம் வசம் உள்துறை, கல்வி, மின்துறை, சட்டம் உள்ளிட்ட முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு பொதுப்பணி, சுற்றுலா, மீன்வளத்துறைகளும், ராஜசேகரனுக்கு வேளாண்மை, விளையாட்டு மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.