தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சை, தேனி, குமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.