தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஒரே மாதத்தில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. சுகாதாரத் துறை தகவலின்படி, ஆகஸ்டில் சென்னையில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,290 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நடப்பாண்டில் கடந்த வாரம் வரை சுமார் 18 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: PT