தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 244 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்