எதிர்க்கட்சிகள் தேர்தல்களை ஒருபோதும் புறக்கணிக்காது என்றும், அவ்வாறு தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்தால் அந்த நிமிடமே இந்திய ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் தொடர்ந்து போட்டியிடுவதன் மூலமே, தேர்தல் நடைமுறைகளில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகளை பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்த முடியும் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.