‘ராமாயணா' பட விநியோக உரிமைக்கு ரூ.450 கோடி கேட்ட தயாரிப்பாளர்

வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை மட்டும் ரூ.450 கோடிக்கு தயாரிப்பாளர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக 2026 மற்றும் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வியாபாரம் இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி