ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 8) இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி வலுவாக உள்ளது. குஜராத் அணி முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, இன்றைய போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்க முனைப்புடன் உள்ளது. கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமாக உள்ளது.