தலைநகர் டெல்லியில் கார் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டெல்லி அரசு துணை நிற்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.