டெல்லி செங்கோட்டை அருகே இன்று (நவ.10) நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் முன்னதாக 8 பேர் உயிரிழந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.