டெல்லியில் இருந்து வெளியேற பொதுமக்களுக்கு உத்தரவு

தலைநகர் டெல்லியில் காற்று மாசு விகிதம் தற்போது 301 முதல் 400 என்ற மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், முடிந்தவர்கள் அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு டெல்லியை விட்டு வெளியேறிவிடுமாறு நுரையீரல் துறை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டின் இறுதி வரை, நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த பயங்கரமான காற்று மாசுபாட்டிலிருந்து பொது மக்கள் தங்கள் நுரையீரலை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி