தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காகத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கல்வி உதவித்தொகையுடன் கூடிய தமிழ் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியின் (தேர்வின்) அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 15 மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் மாதம் ரூ. 2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை www.ulakaththamizh.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.