கேரள கடற்பகுதியில் ஜூன் 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை மொத்தம் 52 நாட்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கான தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் வி.டி.சதீசன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். கடல் வளங்களை பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டும் இந்த ஆண்டுக்கான வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் வழக்கம்போல் அமல்படுத்தப்பட உள்ளது.
நன்றி: PTI