ஒரே நாளில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் உத்தரவு

நாமக்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் நேற்று (மே 29) திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். லஞ்சத்தை தவிர்த்து, வெளிப்படைத்தன்மையுடன் ஆவண பதிவுகளை மேற்கொண்டு, அன்றைய தினமே சொத்து பத்திரங்களை மக்களிடம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டு லஞ்சம் வாங்குவது தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி