கேரளா: கொச்சியில் மனிஷ் விஜய் என்பவர் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் விடுமுறை முடிந்தும் அலுவலகத்திற்கு வராததால் சக ஊழியர்கள் குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்த போது மனிஷ் விஜய் அவரது அக்கா ஷாலினி தாய் சகுந்தலா இறந்து கிடந்துள்ளனர். அழுகிய 3 உடல்களை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.