பெட்ரோல் பங்க்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய முடிவு

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனைக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையகங்களில் தலா 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், அதனை ஒரு மாத காலத்துக்கு சேமித்து வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி