மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்ட போலீசார், தங்கள் சீருடையின் பெயரில் இருக்கும் சாதி பெயரை நீக்க முடிவெடுத்துள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் கொலையை அடுத்து சமூக பதற்றம் ஏற்பட்டது. மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், அவர் போலீசின் சீருடையில் உள்ள பெயரின் மூலம் சாதியை அறிந்துகொண்டு, அந்த போலீஸ் OBC பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், தான் பிடிபட்டதை சாதியப் பிரச்னையாக திசை திருப்பும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தன. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.